• Jan 18 2025

கோபிக்காக சக்காளத்தி போட்ட சண்டை .. வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா கிச்சனில் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருக்க, அங்கு வந்த கோபி பாக்யாவுக்கு காபி போட்டு கொடுக்கின்றார். மேலும்  ஊருக்கே நீ காபி போட்டு கொடுப்பா.. ஆனால் உனக்கு போட்டு தர யார் இருக்கா.. நான் தான் போட்டு தருவேன் என்று லவ் டயலாக் விடுகின்றார்.

இதனை ஜெனியும் பின்னால் இருந்து செல்வியும் பார்த்து விடுகின்றார்கள். இவ்வாறு கோபி பேச, கோபத்தில் கடகடவென காய்கறிகளை பாக்கியா வெட்டுகிறார். இதனால் தான் வெளியே இருந்து காபி குடிப்பதாக கோபி சென்று விடுகின்றார்.

இதன் போது அங்கு வந்த செல்வி, கோபி சாருக்கு இப்பதான் லவ் மலர்ந்திருக்கு போல.. காபில லவ் எல்லாம் கலந்து இருப்பார்.. குடிச்சு பாரு என்று சொல்ல, அதனை கொண்டு போய் கொட்டி விடுகின்றார் பாக்கியா.

d_i_a

அதன் பின்பு கோபியை பார்ப்பதற்காக மையூ வந்து உள்ளே செல்ல தயங்கி நிற்க, அங்கு வந்த பாக்கியா உள்ளே  கூப்பிடுகின்றார். ஆனாலும் தான் வந்தால் பாட்டி திட்டுவார் என்று உள்ளே வர மறுக்கின்றார். மேலும் ராதிகா வீட்டில் அழுது கொண்டு இருப்பதையும் வீட்டை விட்டு காலி பண்ணுவதாக பேசிய விஷயங்கள் பாக்யாவிடம் சொல்லுகின்றார்.


இதன்போது அங்கு வந்த ராதிகா, வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை எல்லாம் எதற்காக இங்கு சொல்லுகின்றாய் என்றும் மையூவுக்கு திட்டுகின்றார். மேலும் பாக்கியா சொல்வது ஒரு மாதிரி.. நடப்பது ஒரு மாதிரி என்று பாக்கியாவிற்கும் பதிலடி கொடுத்துவிட்டு செல்கிறார்.

இதைத்தொடர்ந்து உள்ளே வந்த பாக்கியா  கோபி வீட்டார்களுடன் சிரித்து பேசுவதை பார்த்து உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுத்தது கூட... இன்னும் இரண்டு நாட்களில் வீட்டை விட்டுப் போகுமாறு சொல்லுகின்றார். 

இதை கேட்ட ஈஸ்வரி கோபி இங்கதான் இருப்பான் என்று வாக்குவாதம் பண்ண, அப்படி என்றால் நான் எங்கேயும் போய் விடுகின்றேன் என்று பாக்கியா சொல்கின்றார்.இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement