• Feb 14 2026

காதலர் தினத்துக்கு இப்படியொரு சர்ப்ரைஸா? ரீ-ரிலீஸாகும் காதல் படங்களின் லிஸ்ட் இதோ

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

காதலர் தினத்தை ஒட்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஒரு இனிய சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது. ஒருகாலத்தில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட, காதலை அழகாக சொல்லிய சில சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், ஏற்கனவே “மௌனம் பேசியதே”, “மின்னலே” திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வரிசையில் புதிதாக “காதலர் தினம்” திரைப்படமும் இணைந்துள்ளது.


பிப்ரவரி மாதம் முழுக்க காதல் திருவிழா என்பதால், மௌனம் பேசியதே, மின்னலே ஆகிய இரண்டு திரைப்படங்களும் பிப்ரவரி 13ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காதலர் தினத்திற்கேற்றவாறு “காதலர் தினம்” திரைப்படம் பிப்ரவரி 14ம் தேதி, அதாவது காதலர் தின நாளிலேயே வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பிப்ரவரி மாதம் முழுவதும் திரையரங்குகளில் காதல் மழை பொழியப் போகிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீப காலமாக பழைய ஹிட் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வசூலை பெற்றுவரும் நிலையில், இந்த காதல் திரைப்படங்களின் ரீ-ரிலீஸும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement