பல கோடிகள் செலவு செய்து முன்னனணி நடிகர்களை வைத்து எடுத்தால் மாத்திரமே படங்கள் ஓடும் என கூறியவர்கள் மத்தியில் நல்ல புதுமையான கதைகளுடன் யார் நடித்தாலும் வெற்றி பெறலாம் என நிரூபித்தவர் நடிகரும் , இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் ஆவார்.
ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர் முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற அருமையான திரைப்படத்தை அவரே இயக்கி அவரே நடித்தும் இருந்தார். குறித்த படம் 100 கோடியையும் தாண்டி வசூல் செய்த நிலையிலேயே பெரிதும் பிரபலமான இவர் சமீபத்தில் பல படங்களில் நடித்தும் வருகின்றார். விக்னேஸ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.சி என்ற திரைப்படத்தில் நடித்தும் வருகின்றார்.
அதனை தொடர்ந்தே சமீபத்தில் கோட் படத்தை தயாரிக்கும் பிரபலமான எ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். குறித்த படத்தை ஓ.மை கடவுளே என்ற அருமையான நகைச்சவை திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே இயக்குகின்றார். இந்நிலையில் தற்போது அவர் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே திரைப்படத்திற்கான பிலிம் பெயார் அவோட் கிடைத்துள்ளது. அந்த அவோடை தனது கையில் வைத்தவாறு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
Listen News!