• Oct 04 2024

மெரசலாக நடந்த தளபதி 69ன் திரைப்பட பூஜை... வெளியான அழகிய புகைப்படங்கள் இதோ...

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தளபதியின் TVK கட்ச்சியின் பந்தக்கால் நாட்டுவிழா காலையில் நடைபெற்று தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில் தற்போது  சூப்பராக நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69ன் திரைப்பட பூஜை நடைபெற்றது.   


தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள், நடிகைகள் குறித்து அப்டேட் தொடர்ந்து வெளிவந்தது.


பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் கமிட்டாகியுள்ளனர். இந்த நிலையில், தளபதி 69 படத்தின் பூஜை இன்று  நடைபெற்று முடிந்துள்ளது. தளபதி 69 பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளனர்.  நாளை இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.. 


Advertisement

Advertisement