• Jul 09 2025

கவிதைக்கு கிடைத்த அங்கீகாரம்! 'பாரதி கவிச்சிகரம்' விருது பெற்ற சினேகனின் உருக்கமான வீடியோ

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் இலக்கியத்தின் ஒளிக்கதிராகத் திகழும் மகாகவி பாரதியின் புகழை கொண்டாடும் பாரதி விழா, சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்றாக, தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியப்படும் படைப்பாளிகளுக்கு “பாரதி கவிச்சிகரம்” என்ற சிறப்பான விருது வழங்கப்பட்டது.


அந்த விழாவில், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் அரசியல் ஆய்வாளரான சினேகன் இந்த விருதைப் பெற்றதன் போது எடுத்த வீடியோவினை, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் அந்த விழாவும், அதில் ஏற்பட்ட உணர்வுமிக்க தருணமும் மீண்டும் சமூக ஊடகங்களில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.


“பாரதி கவிச்சிகரம்” என்பது தமிழ்க் கலை, இலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் கவிஞர்களுக்கான ஒரு உயரிய விருதாகும். தமிழரின் அடையாளமாகிய பாரதியின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, கவிஞர்களுக்கான உச்ச அங்கீகாரமாகக் கருதப்படுகின்றது.

இந்த விருதைப் பெற்ற பெருமை இந்த ஆண்டு சினேகனுக்கு கிடைத்துள்ளது என்பது, அவரது சமூக சேவை, தன்னலமற்ற படைப்புகள், மற்றும் திரையுலகத்தில் எழுதிய பாடல்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement