• May 20 2024

நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் வசிக்கும் வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே அட்டகாசமாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

இப்படத்தைத் தொடர்ந்து அஜித், விஜய், விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரு தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையில் வசித்து வரும் அவரது வீட்டின் புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement