• Sep 20 2024

மனைவி மற்றும் காதலி என ஜாலியாக இருக்கும் கோபியின் நிஜ மனைவியைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் புதுமுகங்களை வைத்து ஆரம்பமாகியது இந்த சீரியல். இப்போது இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கு தான் அதிக ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது என்றே கூறலாம்.

அதிலும் பாக்கியாவிற்கு தமிழக குடும்ப தலைவிகள் அனைவருமே ரசிகர்கள் ஆகிவிட்டனர் எனலாம். அத்தோடு டி ஆர் பி யிலும் இந்த சீரியல் முன்னணியில் நிற்கின்றது. இப்போது இந்த சீரியலுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இணைந்து மெகா சங்கமம் நடந்து வருகின்றது.

கோபியின் அப்பாவின் பிறந்தநாளைக் கொண்டாடவே இரு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இதில் ஹைலைட்டாக கோபியின் நிலைமையை தான் அதிகம் காட்டப்படுகின்றன. தனது குடும்பத்தையும், ராதிகாவையும் சமாளிக்கவே போராடும் கோபி இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சமாளிக்கிறார்.

சீரியலில் மனைவி மற்றும் காதலி என ஜாலியாக இருக்கும் கோபியின் நிஜ மனைவியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement