• Sep 20 2024

நடிகர் ராஜ்கிரணின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக “நல்லி எலும்பு” சாப்பிடுவது என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகர் ராஜ்கிரண். அதோடு ராஜ்கிரண் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகர் ராஜ்கிரண்.

ராஜ்கிரண் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர்.மேலும் இவர் குடும்பம் மிக எளிய குடும்பம். வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் இவருடைய பெற்றோர்கள் இவரை ராஜாவாகதான் வளர்த்து வந்தார்கள்.

இதன் பின் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தார். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். அத்தோடு இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன். திரை உலகிற்கு இவர் ராஜ்கிரண் என்ற பெயரை மாற்றிக் கொண்டார்.

கட்டுமஸ்தான உடலமைப்பு, 10 பேர் வந்தாலும் சமாளிக்கும் பாவனை என ராஜ்கிரண் இருப்பார். 1989ம் ஆண்டு என்ன பெத்த ராசா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து 40 படங்களுக்கு மேல் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும் அவர் நடித்த முனி ரசிகர்களிடம் பெரிய ரீச் கொடுத்தது, அதோடு தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த பா.பாண்டி நல்ல பாராட்டுக்களை கொடுத்தது.

முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக நடிகை பத்ம ஜோதியை திருமணம் செய்த ராஜ்கிரணுக்கு 2 மகன்கள் உள்ளனர். அத்தோடு ராஜ்கிரண் சொந்த வீடு இராமநாதபுரத்தில் கீழ்க்கரை என்ற இடத்தில் தான் அவரது வீடு இருந்தது.

தற்போது அந்த வீட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement