• May 20 2024

இத கவனிச்சீங்களா? பிக்பாஸ் 7 சீசன் ப்ரோமோ இந்த டிவி ஷோவின் காப்பியா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 6 சீசங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.


இப்படியான நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அப்டேட்  நேற்று வெளியாகியுள்ளது.கடந்த சீசனில் ஆரம்பிக்கலாமா என அலப்பறை கொடுத்த கமல்ஹாசன், நிசப்தமான கடலின் நடுவே நின்று கொண்டு பிக்பாஸ் சீசன் விரைவில் என அப்டேட்டை கொடுத்துள்ளார். 

இந்த புரொமோ வெளியானதும் இது ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் வாடை அடிக்கிறதே என சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தீவில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது போல இந்த ஏழாவது சீசனிலும் போட்டியாளர்கள் தனி தீவில் தங்க வைப்பதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடா? என்கின்றனர் சிலர்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement