• Apr 15 2026

பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனரா- என்னாச்சு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நிககழ்ச்சியானது முதல் வாரத்திலிருந்தே விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.இதில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் கேங் உருவாக்கி மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருவதை அர்ச்சனா விமர்சித்து வருகிறார். 

அதனால் அர்ச்சனாவுக்கு அதிகம் ஆதரவு ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது.மேலும் இந்த வாரம் வீட்டை விட்டு ஜோவிகா வெளியேறியுள்ளார். சரவண விக்ரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஜோவிகா வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.


மேலும் வீட்டின் அடுத்த வாரத் தலைவராக விஷ்ணு தேர்வாகியுள்ளார்.அதை பார்த்து மாயா - பூர்ணிமா கேங் டான்ஸ் ஆடி ஆட்டம் போட்டு கொண்டாடினார்கள். இதனால் விஷ்ணுவை வைத்து கேம் ஆட இவர்கள் ஏதோ பிளான் போட்டு விட்டார்கள் என்று கூறி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க,பிக்பாஸ் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து விட்டதால் பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்பொழுது வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement