• Apr 28 2024

இப்படி ஒரு ஹிட் படத்தை நம்ம தளபதி தவற விட்டாரா..? அவருக்கு பதிலாக யார் நடிச்சிருக்கார் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். நாளைய தீர்ப்பின் மூலம் ஆரம்பமான இவரின் திரைப்பயணமானது இன்று 65 இற்கு மேற்பட்ட படங்களை கடந்தும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மற்றுமோர் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் உடைய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இவ்வாறாக தொடர்ந்தும் ஓய்வில்லாமல் பல படங்களிலும் நடித்து வருகின்ற தளபதி விஜய் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், ஒரு சில நல்ல படங்களையும் தவற விட்டுள்ளார். இவ்வாறாக அவர் தவறவிட்ட படங்களில் ஒன்று தான் 'ஜோடி'. 1999-ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அத்தோடு இப்படத்தை பிரவீன் காந்தி என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தில் முதன் முதலில் விஜய்யை தான் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குநர் பிரவீன் காந்தி முயற்சி செய்ததாக கூறப்பட்டு தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பலவாறாக இயக்குநர் முயற்சி செய்தும் அப்போது விஜய்யுடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் விஜய்யினால் நடிக்க முடியாமல் போனதாம்.

அதன்பின்னரே இப்படத்தின் இயக்குநர் நடிகர் பிரஷாந்தை தொடர்பு கொண்டு அவரை அப்படத்தில் நடிப்பதற்கு கமிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement