• Apr 19 2024

விமானத்தில் பயணிக்கும் போது காதல் மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்ட விக்னேஷ் சிவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9ம் திகதி அவர்களின் திருமணத்தில் சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இவர்களின் திருமண புகைப்படங்களை ஒரு மாதம் கழித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

திருமணத்தை முடித்த கையோடு கோவில்களில் வேண்டுதல்களை நிறைவேற்றிய விக்கி நயன்தாரா ஜோடி, பின்னர் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். ஒரு வாரம் ஹனிமூன் கொண்டாடிய விக்கி நயன் ஜோடி தங்களின் ரொமான்டிக் போட்டோக்களை ஷேர் செய்தனர்.

சுமார் ஒரு வாரங்கள் தங்களுடைய ஹனி மூனை செலிபிரேட் செய்து விட்டு நாடு திரும்பிய ஜோடி, மீண்டும் தங்களுடைய வேலைகளில் பிஸியாகினர்.அந்த வகையில் நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வந்த 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்னேஷ் சிவன், சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய நிலையில் அதனை சிறப்பாக செய்து முடித்தார்.

நயன்தாரா - விக்கி ஜோடி மீண்டும் தங்களுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு பறந்துள்ளனர்.விமானத்தில் செல்லும் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement