• Apr 25 2024

சேலையிலும் ஒரு கவர்ச்சியா..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தமன்னா… அட்டகாசமான புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் புகழ் பெற்ற முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் 2005-ஆம் ஆண்டு 'சாந்த் சே ரோசன் செகரா' என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். எனினும் தமிழ் சினிமாவில் இவருக்கு கதாநாயகி என்ற அந்தஸ்த்தைக் கொடுத்தது 'கேடி' என்ற படமே. இப்படத்தின் மூலமே இவர் தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த 'கல்லூரி' என்ற திரைப்படம் தமனாவுக்கு சிறப்பான அங்கீகாரதை பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்த்து நடிகர் தனுஷூடன் 'படிக்காதவன்', சூர்யாவுடன் 'அயன்' ஆகிய படங்களில் நடித்தார். இவ்வாறாக பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தது நடித்தமையால் பல பட வாய்ப்புக்களும் இவருக்கு வந்து குவியத் தொடங்கின. அந்த வகையில் 'கண்டேன் காதலை', 'ஆனந்த தாண்டவம்', 'பையா', 'சுறா' உட்படப் பல படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் உண்டோ அந்த அளவிற்கு இவருக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு தொடர்ந்தும் ஓய்வில்லாமல் பல படங்களில் நடித்திருக்கின்றார்.

நடிகை தமன்னா படங்களில் எவ்வாறு பிஸியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இந்த நிலையில் இவர் தற்போதும் சேலை அணிந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement