• Jul 13 2026

டிஆர்பி-யில் முதலிடம்... ஆனாலும் 'சிங்கப்பெண்ணே' சீரியலில் இருந்து தூக்கப்பட்ட நடிகை.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்றான 'சிங்கப்பெண்ணே' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் இந்த தொடர் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளது. 

இதில் மனீஷா மகேஷ், அமல்ஜித் மற்றும் தர்ஷக் கௌடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் அன்புவின் தங்கையான யாழினி கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா நடித்துவந்தார். தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். குறிப்பாக யாழினி கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், திவ்யா தற்போது 'சிங்கப்பெண்ணே' தொடரில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக புதிய நடிகை ஒருவர் யாழினி கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த மாற்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

 “உங்களை மிகவும் மிஸ் செய்வோம்” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அத்துடன், திவ்யாவின் அடுத்தடுத்த திரைப்பயணம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement