• Feb 16 2025

சம்பள பணத்தை சுருட்டவே பாதி பேர் திரியுறாங்க.. ராஜ் கமல் பிலிம்ஸ் பற்றி SK ஓபன் டாக்

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு பிளாக் பாஸ்டர்  ஹிட் கொடுத்த திரைப்படமாக அமரர் திரைப்படம் காணப்படுகிறது. இந்த படத்தை ராஜ்குமார் பழனிசாமி இயக்க, கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார்.

மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 350 கோடிகளை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் வழங்கிய பேட்டி ஒன்றில், அமரன் படத்திற்கு எனக்கு கரெக்டா சம்பளம் வந்துவிட்டது. அதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் படம் ரிலீஸ் ஆவதற்கு  ஆறு மாசத்திற்கு முன்பு சம்பளம் கிடைத்து விட்டது.


இந்த காலத்தில் சம்பளம் கரெக்ட்டா கைக்கு வருவதே பெரிய விஷயமா இருக்கு. அப்படி வந்தாலும் அதிலும் பாதி பணத்தை வாங்கிட்டு போயிடுவாங்க. அதுக்காகவே சில குரூப் இருக்காங்க..

இப்படிப்பட்ட கால கட்டத்தில் எனக்கு சம்பளம் சரியாக கொடுத்து அதை தாண்டி மரியாதையும் ரொம்ப தெளிவாக கொடுத்தது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் என சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் 100 ஆவது நாள் விழாவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement