• May 20 2024

கோபத்தில் குமுறும் குணசேகரன்... விசாலாட்சி மேல் சந்தேகத்தில் கரிகாலன்... வெளியானது மாரிமுத்து நடித்த கடைசிப் ப்ரோமோ... கண் கலங்கும் ரசிகர்கள்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் முதியோர் இல்லத்திற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் போது நந்தினி, ஜனனி சந்தோஷப்படுகின்றார்கள்.


மறுபுறம் குணசேகரன் "வேண்டுதல் என்று சொல்லிட்டு பொங்கல் எடுத்துக்கிட்டு ஒருத்தி வெளியில போற, வீட்டுக்கு வந்தவளைக் கூட்டிட்டு குடுகுடுன்னு மேல ஒருத்தி ஓடுறா, இவளுகள் எதையுமே சாதாரணமாக எல்லாம் செய்றது இல்லை, வச்சால் பெரிய வெடியாய் தான் வைக்கிறது" என்கிறார்.


அதற்கு கரிகாலன் "உங்களுக்கு எதிராக பல சதி வேலைகள் நடந்திட்டு இருக்கும் என்று மண்டையில் ஓடிட்டே இருக்கு" என்கிறார். பதிலுக்கு விசாலாட்சி "இருக்கிற குழப்பம் பத்தாதுன்னு நீ வேற குழப்பி விடுறியா" எனக்கேட்டு கரிகாலனைத் திட்டுகின்றார்.


அதற்கு கரிகாலன் "எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமே" என விசாலாட்சியைப் பார்த்துக் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. எது எவ்வாறாயினும் குணசேகரன் நடித்த கடைசி ப்ரோமோ வீடியோ இது என்பதனால் ரசிகர்கள் பலரும் இதனைப் பார்த்துக் கண் கலங்கியுள்ளனர்.   


Advertisement

Advertisement