• Oct 09 2024

தமிழகத்தில் திடீரென பின்தள்ளப்பட்ட ஜவான்- முக்கிய இடத்தில் குவியும் கலெக்ஷன்- மொத்தமாக இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான படம் 'ஜவான்'. ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் ரிலீசான இந்தப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். 

தமிழ் ரசிகர்களுக்கும் இந்தப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததால் இங்கும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. அத்துடன் பாலிவுட்டிலும் ஷாருக்கான் படம் என்பதால் 'ஜவான்' முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படை எடுத்தனர்.


இதனால் முதல் நாளே ரூ. 129.6 கோடியை வசூலித்தது 'ஜவான்'. இதன் மூலம் பாலிவுட்டில் முதல் நாளே அதிகம் கலெக்சன் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 525 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.மற்ற இடங்களை தாண்டி ஹிந்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.படத்தை தயாரித்த Red Chillies Entertainment படம் எவ்வளவு வசூலிக்கிறது என்றும் அப்டேட் கொடுத்த வண்ணம் உள்ளனர்.


கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான இப்படம் தமிழகத்தில் ரூ. 29 கோடி வசூலித்துள்ளதாகவும், திங்கட்கிழமை கலெக்ஷன் மிகவும் குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் ஹிந்தியில் படத்திற்கு நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறதாம் என்றும் கூறப்படுகின்றது. அத்தோடு இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement