• Apr 30 2024

நயன்தாரா மற்றும் சிம்ரனுடன் இருக்கும் ஜி.பி முத்து- அட்டகாசமான புதிய போஸ்டர்- தலைவரே நீங்க வேற லெவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் தற்போது ஆறாவது சீசனை எட்டி உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் 21-வது போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரி கொடுத்தார்.

இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்போது பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஹவுஸ்மேட்ஸ் கடுமையாக போராடடி வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் தான் ஜி பி முத்து. எப்போதும் பிக்பாஸ் வீட்டை சந்தோஷமாக வைத்திருந்த இவர் தனது பிள்ளைகளுக்காக வீட்டை விட்டு போக வேண்டும். என்னை அனுப்பி விடுங்கள் என்று கூறினார்.இதனால் கமல்ஹாசனும் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் தனது குடும்பத்துடன் இணைந்து தீபாவளி பண்டிகையையும் சிறப்பாகக் கொண்டாடி இருந்தார்.மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல முதல் தான் ஹுரோவாக வந்தால் நயன்தாரா மற்றும் சிம்ரன் ஹுரோயினாக நடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


அந்த வகையில் தற்புாழுது காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஜி.பி முத்துவும் சமந்தாவுக்கு பதிலாக சிம்ரனும் நிற்பது போல் ஒரு போஸ்டரை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்.இது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement