• Aug 17 2025

" முதல்ல நீங்க ஃபோனை நோண்டாதீங்க .." மேடையில் கண்டித்த கோபிநாத்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபலத் தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சினிமா விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்களின் பொறுப்பற்ற அணுகுமுறையை கடுமையாக சாடியுள்ளார். சமூக நலனில் அக்கறையுடன் பல கருத்துக்களை கூறி வரும் இவர் சமீபத்தில் கூறிய இந்த பேட்டி வைரலாகியுள்ளது.


இதில் அவர் “உங்க பிள்ளைகளிடம் 'ஃபோனை நோண்டாதே, ஃபோனை நோண்டாதே' என்று சொல்றீங்களே, முதல்ல நீங்க நோண்டாதீங்க. நீங்க என்ன செய்றீங்களோ அதை தான் உங்க பிள்ளைகளும் செய்வாங்க. ஒரு வீட்டில் இரட்டை விதிகளை வைக்கவே முடியாது. எல்லாருக்கும் ஒரு விதி தான். தந்தை இரவு 11 மணி வரைக்கும் விழித்திருக்கும் வீடுகளில் பிள்ளைகளும் விழித்திருக்கும். தந்தை பாரதியார் புத்தகத்தை படித்தார் என்றால், பிள்ளை பாரதிதாசன் புத்தகத்தை படிப்பான். தந்தை தவறு செய்தால் பிள்ளை தவறு செய்வான். எங்க அப்பா எல்லாம் அப்படி இல்ல நாங்க எல்லாம் பயப்படுவோம் என்று சொன்னீங்கன்னா அது உங்க தலையெழுத்து " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement