• Sep 30 2023

கை நீட்டிப் பேசும் பாக்கியா... தலை குனிந்து அமைதியாக நிற்கும் கோபி... செம ட்ரெண்டிங் வீடியோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இதில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது, கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம்

இந்த சீரியலில் இப்போது தான் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகரித்து வருகின்றது எனலாம். அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா ஷெட்டியும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகிறார்கள்.


இந்நிலையில் சுசித்ரா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் சூட்டிங்கிற்கு ரெடியாகும் போது எடுத்த வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். அதில் பாக்கியா கோபியைக் கை நீட்டிப் பேசுவது போன்றும், கோபி தலை குனிந்து அமைதியாக கேட்பது போலவும் அமைந்திருக்கின்றது. இந்த வீடியோவை ரசிகர்கள் பெரிதும் வைரலாக்கி வருகின்றனர்.  


Advertisement

Advertisement

Advertisement