• May 20 2024

என் பொண்டாட்டியை பத்து தரம் சுத்தி வருவேன்... இதை சொன்னால் மட்டும்... வெள்ளந்தியாக பதிலளித்த ஜிபி முத்து..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 6 ஆவது சீசனானது ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியானது முதல் வாரத்தில் பரபரபப்பான பல டாஸ்க்குகளுடன் நிறைவடைந்து இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. மேலும் கடந்த சீசன்களை விட இந்த சீசன் துவக்கத்திலிருந்தே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 


இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஜிபி முத்து காணப்படுகிறார். இவர் தன்னுடைய வெள்ளந்தித்தனமான செய்கைகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆர்மி தொடங்கும் அளவிற்கு அனைவரையும் தொடர்ந்து கவர்ந்துள்ளார்.


அத்தோடு கடந்த வாரத்தில் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததற்கு ஜிபி முத்து முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவருடன் தனலட்சுமி உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்கள் சண்டை பிடித்து அவரை அழவைத்தமையைத் தொடர்ந்து அவருடைய ஆர்மியில் இருந்து அதிகமான சப்போர்ட் கிடைத்தது. அதுமட்டுமல்லாது அவரது அழுகைக்கு காரணமான தனலட்சுமிக்கு எதிராக எதிர்ப்பும் கிளம்பியது.


எது எவ்வாறாயினும் தொடர்ந்து ரசிகர்களின் பேவரிட்டாக இருந்து வருகிறார் நம்ம ஜிபி முத்து. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதையொட்டி புதிய டாஸ்க்காக நிகழ்ச்சியின் முதல் கேப்டனுக்கான போட்டி நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. அப்போட்டியில் வெற்றி பெற்று முதல் கேப்டனாகியுள்ளார் ஜிபி முத்து. இதையடுத்து அனைத்து போட்டியாளர்களிடமும் அவருடன் மிகவும் சகஜமாக பழகி வருகிறார்.


நேற்றைய தினம் இவ்வாறு அவர் தனது சக போட்டியாளர்களிடம் பேசியபொழுது அவரிடம் "உங்க மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லியிருக்கிறீர்களா" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனக்கு அதுகுறித்தெல்லாம் தெரியாது என்றும் இனிமேல் கூற வேண்டும் என்று வெள்ளந்தியாக தெரிவித்தார்.


அதுமட்டுமல்லாது தன்னுடைய மனைவியும் தன்னிடம் ஐ லவ் யூ என்று கூறியதில்லை என்றும் மாமா என்றுக் கூட சொல்ல வெட்கப்படுவாள் என்றும் ஜிபி முத்து தெரிவித்துள்ளார். அப்படி தன்னுடைய மனைவி ஐ லவ் யூ என்று சொன்னால் பத்து தரம் சுற்றி வருவேன் என்றும் கூறியுள்ளார் ஜிபி முத்து.

விரைவில் இந்த சம்பவத்தை நடத்துகிறோம் என்று மைனா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். இதே போல தன்னுடைய குடும்பத்தை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர்களுக்கு மெசேஜ்களை அவர் இந்நிகழ்ச்சியில் அவர் கூறியும் வருகிறார். அவை அனைத்தும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement