• May 22 2024

கயல் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்ததா...அதுவும் இப்படியொரு காதலா...வெளியான மனைவியின் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இரண்டு கால்களும் உடைந்த நிலையில் நடன நிகழ்ச்சியில் கயல் சீரியல் நடிகர் டைட்டில் வின்னர் ஆகி இருந்த நிலையில் தற்போது அவரின் மனைவி பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்  தான் நடிகர் அவினாஷ். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், தன்னுடைய நான்கு வயதிலேயே இவர் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் ஸ்போர்ட்ஸ் பிளேயரும் ஆவார்.

நேஷனல் லெவெலில் அத்தலடிக்சில் அவினாஷ் பல பதங்களை பெற்றிருக்கிறார். இருந்தாலும், இவருக்கு நடனத்தின் மீது தான் அதிக ஆர்வம்.இவர்  தன்னுடைய சிறு வயதில் இருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். நான்காம் வகுப்பு படிக்கும் போதே சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார். ஆனால், வீட்டில் படிப்பு தான் முக்கியம் என்று கூறிய பிறகு இவர் 12 ஆம் வகுப்பு வரை படிப்பை முடித்துவிட்டு தான் தன்னுடைய டான்ஸ் கரியரை மீண்டும் ஆரம்பித்து உள்ளார்.

மேலும் இவர் சன் டிவியில் அழகு சீரியலில் திருநாவுக்கரசு என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.இதன்  பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி முடிவடைந்த அம்மன் சீரியலிலும் இவர் நடித்திருந்தார்.


கயல் சீரியலில் அன்பு கேரக்டரில் நடித்து வருபவரை பார்ப்பதற்கு சிங்கிள்ஸ் என்று நினைத்து வந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக தான் இருக்கும்.


மேலும்  இவருக்கு காதல் திருமணம் முடிந்து இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இவருடைய மனைவியை மீட் பண்ணி இருக்கிறார். ஆனால் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது. 


இதன் பின்பு இவர்களுடைய காதல் வீட்டில் தெரிந்ததும், அவினாஷ் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். ஆனால் அவருடைய மனைவியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காமல் அவருடைய மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்களாம். 


ஆனாலும் அவினாஷ் அங்கே சென்று பல போராட்டங்கள் செய்து தான் அவருடைய மனைவியின் பெற்றோரிடத்தில் சம்மதத்தை வாங்கி திருமணத்தை செய்திருந்தாராம். எனினும் தற்போது மனைவியோடு பல ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய விடாமுயற்சிக்கு இப்போது கிடைத்திருக்கும் வெற்றிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.


இந்நிலையில் இவரின் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement