• May 04 2024

வாரிசு 3ம் சிங்கிள் எப்போது தெரியுமா..? தேதி மற்றும் நேரம் வெளியானது..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்துள்ளார்.இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது.  இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய்யின் வாரிசு படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி பாடல்கள் இரண்டுமே ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அத்தோடு வாரிசு இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ம் தேதி ரிலீஸ் ஆவதால் மற்ற பாடல்கள் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.

அடுத்து மூன்றாவது பாடல் நாளை 20ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. "Soul Of Varisu" என்ற இந்த பாடல் அம்மா சென்டிமென்ட் பாடல் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.எனினும் இதற்காக தற்போது அதிகம் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. 


Advertisement

Advertisement

Advertisement