• Jul 04 2025

விக்ரமின் ரசிகர்களுக்கு கௌதம் மேனனின் புது அப்டேட்.!துருவ நட்சத்திரதின் திகதி அறிவிப்பு.!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்கும் அனைத்து திரைப்படத்திற்கென தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இந்த நிலையில்  இவர் பல திரைப்படங்களில் நடித்தும்  உள்ளார். தற்போது   கௌதம் மேனன் மற்றும்  விக்ரம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்  "துருவ நட்சத்திரம்" பல வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. ஆனால் பல்வேறு பிரச்சனையின் காரணமாக  ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றது. 



இந்த  நிலையில் இந்த திரைப்படத்தினை திரையில் வெளியிடப்படும் என கௌதம் மேனன் உறுதியாக உள்ளார். என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் கடந்த இரு வருடமாக படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கூட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் படம் வெளியாகவில்லை.


மேலும்  சில சிக்கல்களை இலகுவாக  முடித்து விட்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட கௌதம் மேனன்  உறுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் துருவ நட்சத்திரம் வெளிவந்த பிறகு தான் மற்றவை எல்லாம் என அவர் கூறியிருக்கிறார். இதனால் விக்ரமின் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement