• Jul 04 2025

அனுஷ்கா 'கைதி 2' படத்தில் ஹீரோயினா? – வைரலாகும் அதிர்ச்சி தகவல்..

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அனுஷ்கா ஷெட்டி ‘கைதி 2’ படத்தில் ஹீரோயினாக வரப்போகிறார் என கூறப்படுகின்றது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம், தற்போது அனுஷ்கா உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு படங்களை தவிர்த்து ஒதுக்கி உள்ள நிலையில், இவ்வாறு ஒரு ஹீரோயின் ரோலில் நடிக்கப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஆனால், நெருக்கமான வட்டாரங்கள் கூறுவதாவது, "கைதி 2 திரைப்படத்தில் ஹீரோயின் குறித்த எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. மேலும், படத்தின் கதையைப் பொறுத்தவரை, ஹீரோயின் இல்லாத திரைக்கதை தான் தற்போது லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருக்கிறார்" என்கிறார்கள்.


தற்போது இணையத்தில் பரவும் இன்னொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், ‘கைதி 2’ படத்தில் சூர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார். அவரும் கார்த்தியும் ஒரே படத்தில், ஆனால் எதிர்பக்கங்களில் மோதுகிறார்கள் என்பது ஹைலைட்.

இருவரும் அண்ணன்-தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அண்ணன் வில்லன், தம்பி ஹீரோ என அமையும் இந்த புதிய முயற்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அதிர்ச்சி தான். இது ‘தக் லைஃப்’ படத்தில் கமல் - சிம்பு கலந்த மோதலை நினைவூட்டுகிறது.

Advertisement

Advertisement