கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மம்முட்டி மற்றும் நயன்தாரா நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு நயன்தாரா அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நயன்தாராவும் இல்லை சமந்தாவும் இல்லை கௌதம் மேனனின் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாகவும் மம்முட்டி படம் இப்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராக இருந்தும் அது எப்போது ரிலீஸ் ஆகும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தான் அவர் மம்முட்டி, நயன்தாரா நடிக்கும் படத்தை தொடங்க இருக்கும் நிலையில் மம்முட்டி பிசியாக இருப்பதால் அவருடைய கால்ஷீட் இப்போதைக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதனை அடுத்து தான் அவர் தற்போது யோகி பாபுவை வைத்து ஒரு குறுகிய கால படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வனிதா மணி ’ என்ற பாடலுடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
யோகி பாபு, கௌதம் மேனன் மற்றும் சமூக வலைத்தல பிரபலம் மூவரும் இந்த வீடியோவில் இருக்கும் நிலையில் இவர்கள் மூவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!