• Apr 28 2024

பிரதமர் மோடியை சந்தித்த 'காந்தாரா' இயக்குநர் - KGF யாஷ்! வைரலாகும் புகைப்படம்.

Jo / 1 year ago

Advertisement

Listen News!

திரையரங்குகளில் ரூபா 400 கோடி வரை வசூலை பெற்று 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு தற்போது பிரபல அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகின்ற காந்தாரா திரைப்படத்தில் ஆடுகளம் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்தின் இன்னொரு பலமாக இருந்தது.  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது. 


இதனிடையே காந்தாரா படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, எல்லாருமே காந்தாரா பார்ட் 2 எப்ப வரும் என்று கேட்டார்கள். நீங்கள் இப்போது பார்த்தது தான் பார்ட் 2. முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வரும். அதில் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம், குறிப்பிட்ட அந்த தெய்வத்தின் பின்னணி கதைகள் உள்ளிட்டவை இடம்பெறும். இதற்கான பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்றும் கூறினார். 

இந்நிலையில் பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைக்க கர்நாடகா வந்த பிரதமர் மோடியை கேஜிஎஃப் அட நாயகன் யாஷ் மற்றும் காந்தாரா பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி, இவர்களுடன் இவ்விரு படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே படத் தயாரிப்புக்குழுவினர், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் குடும்பத்தினர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

முன்னதாக காந்தாரா படத்தை கலாச்சாரம் மற்றும் எடுத்துரைக்கும் படமாக குறிப்பிட்டு பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement