தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்பறவை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி.
இறுதியாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றது. இதில் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் பெயர் தான் கோழிப்பண்ணை செல்லத்துரை. இந்த படத்தில் ஜோகி பாபு மற்றும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்றார்கள். இதன் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்துள்ளது.
கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் டீசரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டார்கள். மேலும் இந்த படம் எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற 22 வது ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் யோகி பாபு நடித்த கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதனை இயக்குனர் சீனு ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செப்டம்பர் 12 முதல் 21 வரை வரும் இந்த விழாவில் பதினெட்டாம் தேதி இரவு 8 மணிக்கு இந்த திரைப்படம் ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்பட உள்ளது. 22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் இதுவரை வேற எந்த தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!