• Jan 15 2025

முதல்ல இவங்களுக்கு குடுங்கப்பா நேஷனல் அவார்டு.. பாக்கியாவுக்கு குவியும் ஆதரவு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் குடும்ப பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு அவர் கொண்ட கஷ்டங்கள், அதிலிருந்து நீண்ட விதங்கள், பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள், அதற்கு அவர் எடுத்த நல்வழி காட்டல்கள், தொழில் ரீதியாக முன்னுக்கு வந்த விதம் இவ்வாறு பல கோணங்களில் இந்த சீரியல் நகர்த்தப்பட்டு வருகின்றது.

தற்போது கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், ராதிகாவால் ஏற்பட்ட பிரச்சினைகள், ராதிகா வீட்டுக்குச் சென்று ஈஸ்வரியால் ஏற்பட்ட பிரச்சனை, ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது என்று சுவாரசியமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

இதன் காரணத்தினாலேயே கடந்த சில வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் மூன்றாவது இடத்தை பிடித்து முன்னேறி இருந்தது. 


தற்போது இந்த சீரியலில் பல குளறுபடிகளை ஏற்பட்டு  ரொம்பவும் எமோஷனல் ரீதியாக நகர்வதனால் மீண்டும் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இந்த வாரம் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மீண்டும் அதால பாதாளத்திற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகை சுசி, எழிலை வீட்டை விட்டு துரத்தும் போது அதற்காக அவர் எப்படி ஆக்ட் பண்ணினார் என்பதை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் முதல்ல இவருக்கு நேஷனல் அவார்ட் கொடுங்க என்று அவரின் நடிப்பை பாராட்டி கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement