• Jul 21 2025

யாழில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்..இயக்குநர் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, லப்பர் பந்து நாயகிகளான சஞ்சனா, சுவாசிகா, பாடகி கில்மிஷா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிறுவனம் இளம் படைப்பாளிகளுக்கு தங்களது முதல் குறும்படங்கள் மற்றும் முழுநீள திரைப்படங்களை உருவாக்குவதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் செயல்பட இருக்கின்றது. 


இயக்குநர் அமீர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் 'மாயாவலை' எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் அமீர், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, அசோக்கன், தீனா, வின்சென்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்கிறார்.


இந்த புதிய தயாரிப்பு நிறுவனம், யாழ்ப்பாணத்தில் உள்ள இளம் படைப்பாளிகளுக்கு ஒரு புதிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்கள் மேள தாளங்கள் ஒயிலாட்டம் ,மயிலாட்டத்துடன் வரவேற்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement