• May 10 2025

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் காட்சி தடை...! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர்களின் ஆதரவுடன் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் தான் அஜித். தனது எளிமை, கெளரவம் மற்றும் நடிப்புத் திறமையால் 'தல' என அன்புடன் அழைக்கப்படும் அஜித், ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களுடன் திரையுலகில் தனித்த அடையாளத்தை பெற்றிருக்கின்றார்.

தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் 'குட் பேட் அக்லி' ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இருவரும் பல வருடங்களுக்கு பிறகு இணைந்திருப்பதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மனதில் அதிகரித்துள்ளது.


'குட் பேட் அக்லி' படம் வருகின்ற ஏப்ரல் 10ம் திகதி உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர் படம் வெளியாகும் போது ரசிகர்களிடம் இருக்கும் அன்பும் ஆர்வமும் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்த விடயம்.

இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் காட்சி குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மதுரையில் படத்தின் முதல் காட்சி திரையிடப்படாது என கூறப்படுகின்றது. தற்போது கிடைத்த தகவலின் படி, மதுரையில் பல மல்டிபிளக்ஸ் மற்றும் தனி திரையரங்குகளில், 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் காட்சி டிக்கெட்டுக்கள் விற்பனையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ரூ.500க்கு டிக்கெட் விற்பனை செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், முதல் காட்சி நடத்தப்படுவது குறித்தும் குழப்பம் நிலவுகின்றது. இந்த சூழ்நிலையில், விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே கடும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.


Advertisement

Advertisement