• May 19 2024

ரஜினிக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள் -இது தான் விசயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

தனக்கென உரித்தான தனி பாணி நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த அவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினிகாந்திற்கு 2-மகள்கள் உள்ள நிலையில் இவரது மகள் ஐஸ்வர்யாக்கும் நடிகர் தனுஷிற்கும் சமீபகாலத்தில் விவாகரத்து இடம்பெற்றிருந்தது.

ஏற்கெனவே ரஜினியின் இளைய மகள் விவாகரத்து பெற்று அதன்பின் மீண்டும் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிய நிலையில் திடீரென மூத்த மகளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துள்ளது.

இவ்வாறான நிலையில், உலக தந்தையர் தினமான இன்று திரைப் பிரபலங்கள் பலரும் தமது தந்தையுடன் எடுத்த போட்டோ, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்களோ தங்களின் தலைவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அதாவது "மூத்த மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற கவலையில் இருக்கின்றீர்கள், ஐஸ்வர்யா நிச்சயம் மனம் மாறுவார், இதுவும் கடந்து போகும் தலைவரே" என்று ரசிகர்கள் நம்ம சூப்பர் ஸ்டார்க்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement