• Sep 20 2024

அஜித்தின் வலிமையை முந்திய சிவகார்த்திகேயனின் டான்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன் . இவர் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து டாப் நாயகனாக வளர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது

இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அதில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.கல்லூரி, அப்பா-மகன் சென்டிமென்ட் என கதைக்களம் அமைந்திருக்கிறது.

அதிலும் சென்டிமென்ட் காட்சிகள் மக்களை அதிகம் அழ வைத்துவிட்டதாக அனைவருமே கூறி வருகிறார்கள்.

இந்த டான் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 80 கோடி வரை வசூலித்துவிட்டது.தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 65 கோடி வரை படம் வசூலித்திருக்கிறது.

அத்தோடு தமிழகத்தில் அசால்ட்டாக வசூல் சாதனை செய்யும் டான் வெளிநாடுகளிலும் நல்ல கலெக்ஷன் பெற்று வருகின்றது. UKவில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் £146K டாலர் வசூலித்துள்ளதாம்.

இந்த வசூல் அஜித்தின் வலிமை படத்தை விட அதிகம்.

UKவில் இந்த வருடம் டாப் வசூல் லிஸ்டில் இருக்கும் 3 படங்கள்,

  • பீஸ்ட்- £570K
  • டான்-£146K
  • வலிமை-£140K
https://www.youtube.com/embed/66paDJnH4XU

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement