• Apr 14 2026

குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்த "சிறகடிக்க ஆசை" சீரியல் நடிகை..

shali / 4 months ago

Advertisement

Listen News!

திரையுலகம் மற்றும் சீரியல் உலகில் பல புகழ்பெற்ற நடிகைகள், பல்வேறு காரணங்களால் தனிப்பட்ட வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தற்பொழுது, 39 வயதான பிரபல சீரியல் நடிகை ராஜேஸ்வரி, குடும்ப பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சமூக வலைத்தளங்களிலும், செய்தியாளர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நடிகை, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல மெகா தொடர்களில், குறிப்பாக “சிறகடிக்க ஆசை” போன்ற படைப்புகளில் நடித்து, பார்வையாளர்களிடையே பெரும் புகழைப் பெற்றுள்ளார். அவர் நடித்த கதாபாத்திரங்கள், பெண்களின் பல்வேறு நிலைகளையும், குடும்ப உறவுகளின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தி வந்தவை.

சமூக வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, நடிகை குடும்ப பிரச்சனை காரணமாக கணவருடன் சண்டை போட்டு, தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். அந்த நேரத்தில் உள்ள மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துள்ளார். 

இந்த சம்பவம், திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்ல ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement