• Apr 14 2026

பெண்களின் உடை யாரையும் உறுத்தாமல் இருக்கணும்.. பாரம்பரியத்தை காப்பாற்றுங்க.! தேவயானி

shali / 4 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற நடிகை தேவயானி, சமீபத்தில் ஒரு நேர்காணலில், பெண்களின் உடை மற்றும் இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவம் குறித்து தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். தேவயானி, திரை உலகில் நடிப்பதுடன் சமூக மற்றும் கலாச்சார கருத்துகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர். இதன் மூலம் அவர் பகிர்ந்த கருத்துகள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.


நேர்காணலின் போது தேவயானி, "என்ன பொறுத்தவரை பெண்களோட உடை யாருடைய கண்ணையும் உறுத்தாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். நாம் இந்தியாவில தான் இருக்கோம், நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு, நம்முடைய உடைன்னு புடவை, சுடிதார், சல்வார்னு எவ்வளவோ இருக்கு. அந்த பாரம்பரியத்தைக் காப்பாத்தணும், நம்மளோட கலாச்சாரம் ரொம்ப முக்கியம்." என்று கூறியிருந்தார். 

தேவயானியின் கருத்து, குறிப்பாக இந்திய பெண்கள் அவர்களது உடைகளை தேர்வு செய்யும் போது கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறது.

அத்துடன், தேவயானி பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நவீன பேஷன் மற்றும் பாரம்பரியத்தின் சமநிலை எப்படி வைக்கப்பட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement