• Apr 20 2026

‘மெஜந்தா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு.! ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்த பதிவு.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு உருவாகும் படங்களில், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படைப்பு ‘மெஜந்தா’. பரத் மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வெளியிட்டவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ், அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த இந்த போஸ்டர் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.


இயக்குநர் பரத் மோகன், முன்னதாக தனித்துவமான கதை சொல்லும் முறை மூலம் பாராட்டுப் பெற்றவர். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படம் எந்த வகை கதை கொண்டது? என்ற ஆர்வத்தை ஏற்கனவே ரசிகர்கள் கொண்டிருந்தனர். இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதால் எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.

போஸ்டரை வெளியிட்ட நடிகர் சாந்தனு, தனது டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் அடுத்த படமான ‘மெஜந்தா’வின் அதிகாரபூர்வ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி.” என்று பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் சாந்தனுவுடன் ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். அஞ்சலி நாயர், சமீபத்திய படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர். இவர்களின் கூட்டணி முதல் முறையாக இணைவதால், படம் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement