• May 22 2024

லியோ படத்தில் நடிக்கும் இயக்குனர் கௌதம் மேனன்... துருவ நச்சத்திரம் குறித்து கூறிய நியூ அப்டேட் நியூஸ்... மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனராக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இவர் இப்போது நடிகராகவும் மக்கள் மனங்களை கவர்ந்தவராகவும் மாறிவிட்டார். சமீபத்தில் இவர் துருவ நட்சத்திரம் திரைப்படம் தொடர்பாக ஒரு தகவலை கூறியுள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் ஒரு சில படங்களை இயக்குவதிலும் மும்முரமாக இருந்து வருகிறார். விஜய் நடிப்பில் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் "லியோ" படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கௌதம்.

இந்த நிலையில் இவரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா,சிம்ரன் ஆகியோர் நடிக்க ஹரீஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட இந்தப் படம் சில பல சிக்கல்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. ஆனால் அந்தப் படத்தின் டீஸர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்தப் படம் 2023 நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் என்று படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் கௌதம் மேனன் சமீபத்தில் துருவ நட்சத்திரம் படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.அதாவது துருவ நட்சத்திரம் படத்தை விக்ரம் பார்த்து விட்டதாகவும் படத்தை பார்த்து அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினாராம்.

மேலும் படத்திற்கான டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்டதாக கூறினார்.அதுமட்டுமில்லாமல் துருவ நட்சத்திரம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தார்.

அந்த வகையில்  துருவ நட்சத்திரம் படம்  வெளிவருமா? இல்லையா? என்ற கேள்விக்கு கௌதம் மேனன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இதனால் ரசிகர்கள் இத்திரைப்பட ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.  

Advertisement

Advertisement