• Apr 26 2024

பிரபல மலையாள நடிகர் மரணம்…கடும் சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் மலையாள சினிமாவுக்கு என்று தனி இடமுண்டு. இந்த நிலையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சஜித் பட்டாளம்(54).

மேலும் இவர், டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'களா' என்ற படத்திலும், நிவின் பாலி நடிப்பில் வெளியான 'கனகம் காமினி கலகம்,' 'ஜான் இ மான்' ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

அத்துடன் பல வெப் சீரீஸிலும் அவர் நடித்து வந்தார்.அத்தோடு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்வாறுஇருக்கையில் இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement