• Apr 23 2024

பங்களா வீடு, சொகுசு கார்.. மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் மகேஷ் பாபு. இவர் பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன் என்பதும் தெரிந்ததே. 1979ம் ஆண்டு நீடா எனும் தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேஷ் பாபு, 1999ல் ராஜகுமாரடு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

1975ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி பிறந்த மகேஷ் பாபு இன்று தனது 47வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். கடந்த 2005ம் ஆண்டு நம்ரதா என்பவரை திருமணம் செய்து கொண்ட மகேஷ் பாபுவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ஒக்கடு, போக்கிரி, தூக்கடு, ஸ்ரீமந்துடு, பரத் அனி நேனு, மகரிஷி, சரிலேரு நீக்கெவ்வரு, சர்காரு வாரி பாட்டா என ஏகப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் படங்களை கொடுத்துள்ள மகேஷ் பாபுவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தின் போஷ் ஜூபிளி ஹில்ஸ்ஸில் 28 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்ட பங்களா உள்ளது.

அடிக்கடி குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு ஹாலிடேவுக்காக பறந்து செல்ல சொந்தமாக ஒரு பிரைவேட் ஜெட்டையே வாங்கி வைத்திருக்கிறார் . மேலும், 2.24 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் சொகுசு கார், 1.19 கோடி மதிப்புள்ள ஆடி இ ட்ரான் கார் உள்ளிட்ட கார்களும் இவரிடம் உள்ளன.

சமீபத்தில் தனது சம்பளத்தை 80 கோடி ரூபாய்க்கு உயர்த்தி உள்ளார் மகேஷ் பாபு. இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு 244 கோடிக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement