• May 03 2024

விஜய் மாஸாக சண்டை போடும் காட்சி-வாரிசு படத்திலிருந்து கசிந்த வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் இயக்குநரின் நடிகராக தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தன்னுடைய அயராத முயற்சியினால் தான் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

மேலும் இவரைப் பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி வெளியாகினாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது கெரியரில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் தற்போது நடிக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கி வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

அத்தோடு பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கமெர்ஷியல் ஆக்ஷன் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வாரிசு உருவாகி வருகிறது.

அத்தோடு பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

நான்காம்கட்ட படப்பிடிப்பு தற்போது வைசாக்கில் நடைபெற்று நிலையில், துறைமுகத்தில் நடைபெற்று வரும் ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பு புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் லீக்கானது.

எனினும் அதை தொடர்ந்து நடிகர் விஜய் மாஸாக சண்டை போடும் வீடியோ தற்போது லீக்காகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

Advertisement

Advertisement

Advertisement