• May 20 2024

கமலோடு இணைந்து நடிப்பதற்காக அடித்துக்கொள்ளும் பிரபல நடிகைகள்..! KH 234 படத்தின் புதிய அப்டேட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் தான் KH 234. இப்படத்தை ராஜ் கமல், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்திற்கான ப்ரோமோ ஷூட்டிங் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை கமல் ஹாசன் நேற்று பிக் பாஸ் மேடையில் கூறியிருந்தார்.

குறித்த ப்ரோமோ டீசர் வீடியோவை, அடுத்த மாதம் கமல் ஹாசன் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் திகதி வெளியிட படக்குழுவினர்  திட்டமிட்டுள்ளார்களாம்.

இதைத்தவிர இப்படத்தில் கமலுடன் இணைந்து நயன்தாராவும் நடிக்கவுள்ளாராம்.அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 


ஏற்கனவே, நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது குறித்த தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இதன் முழு அப்டேடை கமல் மற்றும் மணிரத்னம் வெளியிட்டால் தான் திரிஷாவா? நயன் தாராவா? என்று தெரியவரும்.

இதேவேளை, கமலுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் முதல் படமாக கமல் 234 திரைப்படம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement