தமிழ் சினிமா மற்றும் சமூக மேடைகளில் தனது தெளிவான கருத்துக்களாலும், பெண்களின் நீதி பேசும் உறுதியான குரலாலும் மக்கள் மத்தியில் அறியப்படும் நடிகை குஷ்பு சுந்தர், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் வலிமையை பறைசாற்றும் வகையில் உணர்ச்சி பூர்வமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், ஒரு பெண் எதிர்கொள்ளும் உணர்வுப் போராட்டங்கள், நம்பிக்கைக் கேள்விகள் என்பவற்றை கவிதை முறை போல் விளக்கியுள்ளார். அத்தோடு, ஒரு பெண் சிங்கம் தனது குட்டிகளைப் பாதுகாத்து கொண்டிருக்கும் அற்புதமான புகைப்படத்தின் மூலம் இந்தப் பதிவினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
குஷ்பு தனது பதிவில் எழுதிய வரிகள், பெண்களின் உள்ளார்ந்த வலிமையை வெளிக்கொண்டு வருவதோடு, நம்மில் பலர் சுமக்கும் இருண்ட உணர்வுகளை வெளிப்படையாக பேசும் துணிச்சலாகவும் இது அமைந்துள்ளது.
அந்தவகையில் குஷ்பு, "உடைந்த வாக்குறுதிகளின் எதிரொலியில், அவள் தன்னை சந்தேகிப்பதால் அல்ல, மாறாக அவள் அதிகம் நம்பியவர் விலகிச் சென்றதால் அவள் தன் மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கிறாள். அவளுடைய நேர்மை, வலிமையின் தூண், இப்போது துரோகத்தின் எடையின் கீழ் நிழலாடுகிறது..."என்றார்.

இவ்வாறு தொடங்கும் இந்த உரை, பெண்கள் அனுபவிக்கும் ஆழமான மன அழுத்தங்களை உருக்கமாகப் பதிவு செய்கிறது. வலியில் குரல் கொடுக்காமல், மௌனத்தில் நின்று விடுகின்ற ஒரு பெண்ணின் அந்தரங்கப் போராட்டம் இவற்றில் பிரதிபலிக்கிறது. இந்தப் பதிவுக்குப் பலரும் "எனது வாழ்க்கையே இது போல இருக்கிறது" என்று தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர்.
Listen News!