• May 03 2024

வருங்கால கணவர் இப்படி தான் இருக்கனும்…அடடே நம்ம சிவாங்கி கூறிய விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.இதில் கோமாளியாக கலக்கி வருபர் தான் சிவாங்கி.

இவர் முதல் சீசனில் இருந்து தற்போது நடக்கும் மூன்றாவது சீசன் வரை கோமாளியாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

இவர் ஆரம்பகாலகட்டத்தில் ஒரு பாடகராக விஜய் டிவியில் பங்கு பற்றி இருந்தாலும் இவருக்கென்று அங்கீகாரம் கொடுத்தது குக்வித்கேமாளி தான்.

பல கிண்டலுக்கு மத்தியில் வளர்ந்து வரும் சிவாங்கி பல்வேறு படங்களில் கெமிட்டாகி நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சிவாங்கி அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர் "மனதால் அழகாக இருக்க வேண்டும்" என தெரிவித்து இருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு சிவாங்கி குக் வித் கோமாளியில் காமெடியாக பேசும்போது தனக்கு விஜய் தேவரக்கொண்டா போல ஒரு கணவர் வேண்டும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement