• May 07 2024

இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல சீரியல் நடிகை-வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தற்பொழுது சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு இணையாக சீரியல் நடிகைகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.அவர்களும் தமது நடிப்பு திறமையால் சின்னத்திரையில் முன்னணியில் காணப்படுகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் வடிவு என்ற வில்லி ரோலில் நடித்து வந்தவர் தீபா.இவர் இதில் வில்லியாக நடித்திருப்பது அனைவரது கவனத்தை யும் ஈர்த்தது.

அந்த வகையில் அன்பே சிவம் என்ற சீரியலிலும் இவர் வில்லியாக நடிப்பதோடு மாத்திரமல்லாது பல சீரியலடகளில் நடித்து வருகின்றார்.

அதாவது சன் டிவி ,விஜய் டிவி ,ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் நடித்து வருகின்றார்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். மகனுடன் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தீபா வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தீபா விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார் என தகவல் கசிந்துள்ளது. அவர் சாய் கணேஷ் பாபு என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறாராம்.

அவரை தான் விரைவில் தீபா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement