• May 03 2024

குக்வித் கோமாளி சிவாங்கியின் முதல் சம்பளம் இவ்வளவு தானா..? அதுகும் அவருக்கு கிடைக்கலையாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.

பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார் என்றாலும் , இவருக்கு அதிக அளவிலான பிரபலத்தை ஏற்படுத்திக்கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

மேலும் அந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை நிறைவடைந்ததை அடுத்து தற்போது மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகின்றது.அதிலும் சிவாங்கி கோமாளியாக அசத்தி வருகிறார்.

அது மட்டுமலாமல் ஆல்பம் பாடல்கள் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது , சினிமாவில் பாடல்கள் பாடுவது என படுபிஸியாக இருக்கிறார் சிவாங்கி.தற்போது கூட சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில் தனக்கு கிடைத்த முதல் சம்பளம் பற்றி ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.அதாவது தனக்கு ஏழு எட்டு வயதில் இருக்கும் போதே தான் சம்பளம் பெற்று விட்டாராம்.

அதாவது தான் ஒரு சினிமா படத்திற்கு பாடியிருந்தேன்.அதற்கு எனக்கு 1000.00 பணம் தந்து இருந்தார்கள்.அதுவும் எனக்கு தரவில்லை எனது அப்பாவிடமே அந்த பணத்தை கொடுத்தார்கள் என கூறி இருந்தார்.இந்த விடயம் ரசிககர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement