• Apr 26 2024

56 வயதிலும் இப்படி ஒரு அழகா?- நடிகை நதியா வெயிட்ட Family புகைப்படம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு டாப் நடிகர்களான பிரபு, ரஜினி, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை நதியா. 

80 மற்றும் 90களில் இளசுகளின் கனவு கன்னியான நதியா, தற்போது 56 வயதுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இப்போதும் இளம் ஹீரோயின்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுக்கிறார்.இவருடைய இளமையின் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்நிலையில் நதியாவின் கணவரை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போது நதியா தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் சேர்ந்து இருக்கும் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்ததும் பலரும் ஷாக்காகி உள்ளனர். ஏனென்றால் 56 வயதிலும் இளமை மங்காமல் இருக்கும் நதியா, தன்னுடைய மகள்களுக்கு அம்மா போல் இல்லாமல் சகோதரி போலவே தெரிகிறார். அதுவும் இந்த புகைப்படத்தில் நதியாவின் கணவருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.அந்த அளவிற்கு நதியாவின் கணவர் கொஞ்சம் வயதில் மூத்தவர் போலவும், நதியா இளமையான தோற்றத்திலும் தெரிகிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement