• Jan 15 2025

’கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்தது உண்மை தான்.. ஆனால்...? ’எதிர்நீச்சல்’ விமல் பேட்டி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம்’ என்ற தொடரில் ’எதிர்நீச்சல்’ தொடரில் நடித்த விமல் இணைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த தகவலை அவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் உண்மைதான் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார்.

’எதிர்நீச்சல்’ தொடரில் கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்த விமல் ’கார்த்திகை தீபம்’ தொடரில் இணைய இருப்பதாகவும் குறிப்பாக வில்லி கேரக்டரில் நடிக்கும்  ரம்யாவுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறிய போது ’கார்த்திகை தீபம் ’தொடரில் நடிப்பது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் நான் கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறேன், இந்த வாரம் மட்டும் வரும் எபிசோடுகளில் நான் சிறப்பு தோற்றத்தில் வருவேன், அதன் பிறகு என்னுடைய கேரக்டர் அந்த சீரியலில் இருக்காது’ ட்விஸ்ட் வைத்தார்.



மேலும் ’எதிர்நீச்சல்’ தொடருக்கு பிறகு ஒரு நல்ல கேரக்டரில் நடிக்க தற்போது தான் ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளேன், அது குறித்த அப்டேட் விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவரும், அப்போது என்னை ஒரு முக்கியமான கேரக்டரில் வெள்ளித்திரையில் நீங்கள் பார்க்கலாம்’ என்று தெரிவித்தார்.

தற்போது சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ’சொக்கத்தங்கம்’ என்ற சீரியலிலும் விமல் நடித்து உள்ளார் என்பதும் இந்த தொடர் ஒளிபரப்பாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ’எதிர்நீச்சல்’ கொடுத்த வெற்றி காரணமாக விமலுக்கு அடுத்தடுத்து சீரியல், வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement