சன் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென சேனல் தரப்புக்கும் இயக்குனருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சீரியல் முடிக்கப்பட்டதாகவும் இதனால் ’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்த நடிகைகள் மிகவும் சோகமாக தங்களது சமூக வலைதளத்தில் செய்த பதிவுகளை ஏற்கனவே பார்த்தோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியல் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஜூன் 8-ம் தேதி கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகி சீரியலுக்கு சுபம் போடப்பட்டது.
சீரியல் முடிய போகிறது என்று அதில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கே கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட அன்று தான் தெரியும் என்றும் ஜி மாரிமுத்து மறைவுக்கு பிறகு டிஆர்பியில் அடி வாங்கியதால் சில மாற்றங்களை செய்ய சொல்லி சேனல் தரப்பு கூறியதாகவும் அதற்கு இயக்குனர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் தான் சீரியல் திடீரென முடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிந்ததால் மிகவும் சோகமாக உள்ளதாக அதில் நடித்த நடிகைகள் சிலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த சோகத்திற்கு உண்மையான காரணம் வருமானத்தில் அடி விழுந்தது தான் என்று கூறப்படுகிறது.
’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்த ஐந்து முக்கிய நடிகைகளுக்கு அந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்தபோது கடை திறப்பு விழா உள்பட பல ஆஃபர்கள் வந்ததாகவும் அதில் நல்ல வருமானம் கிடைத்ததாகவும் தற்போது ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிவடைந்து விட்டதை அடுத்து ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில விழாக்கள் கூட ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் லட்சக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த வருமானம் நின்று விட்டதால்தான் அந்த அந்த சீரியலில் நடித்த முக்கிய நடிகைகளுக்கு பெரும் சோகமாக இருக்கிறது என்றும் அவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு சேனல் தரப்பு மற்றும் இயக்குனர்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
Listen News!