• Nov 04 2025

ஒரே சம்பவம்…46 வருட பிரிவு..!ரஜினி-கமல் மீண்டும் இணைவதற்க்கான காரணம் என்ன தெரியுமா?

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் ஆளுமைகள், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். 1980களில் திரையுலகில் வலம்வந்த இந்த ஜோடி, ஆரம்பத்தில் நெருக்கமான நட்பு மற்றும் கூட்டு பயணத்தை பகிர்ந்துகொண்டனர். ஆரம்ப காலத்தில் கமல், பெண்களின் கனவு நாயகனாக ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார். அழகு, வசன உச்சரிப்பு, நடனம் என அனைத்து குணாதிசயங்களும் அவரிடம் இருந்தது.


அதே சமயம், தென்னாட்டு நிறம், வேகமான வசனங்கள், தனிச்சிறப்பான ஸ்டைல் ஆகியவற்றுடன் வந்த ரஜினி, ஹீரோ என்ற வடிவத்தை புதிதாக கட்டமைத்தார். இருவரும் இணைந்து 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனி பாதைகளை தேர்ந்தெடுத்தனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், மூத்த சினிமா விமர்சகர் பிஸ்மி, இருவரும் பிரிந்து தனித்தனி பாதையில் செல்ல காரணமான சில வரலாற்று சம்பவங்களை வெளிச்சமிட்டுள்ளார். குறிப்பாக, ‘அலாவுதீனும் அற்புதவிளக்கும்’ படப்பிடிப்பு நேரத்தில் ஏற்பட்ட வாள் சண்டை ஒரு திருப்புமுனை ஆனது. இதில், ரஜினியின் நடிப்பை தாண்டி உண்மையான தாக்கம் கமலுக்கு நேர்ந்ததாகவும், இதனால் கமல் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, ரஜினிக்கு சில மனரீதியான பிரச்சனைகள் இருந்ததாக செய்திகள் வெளியாகின.


மேலும், இருவரும் ஒரு கட்டத்தில், “நம்மை வைத்து மற்றவர்கள் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்; நாம் தனித்தனியாக சென்றால் நமக்கான மதிப்பையும், லாபத்தையும் பெற முடியும்” என்ற முடிவில் வந்ததாகவும் பிஸ்மி கூறுகிறார். இதுவும் அவர்கள் பிரிவுக்கு காரணமாக அமைந்தது.

இப்போது, 46 ஆண்டுகள் கழித்து, இவர்கள் இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பண்டிகையாக அமைந்துள்ளது.

இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இருவரும் எவ்வாறு தங்கள் நடிப்புத் திறமையால் மின்னவிருப்பார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement