• Sep 26 2023

Devotional Round-ல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஈழத்து பாடகி கில்மிசா- என்ன பாடல் பாடியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் சிறுவர்களில் ஒளிந்திருக்கும் இசை திறமையை வெளியுலகிற்கு கொண்டு வரும் ஷோ தான் சரிகமப ஜூனியர் இசை.இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளில் மற்றும் பல பிரதேசங்களில் உள்ள திறமை வாய்ந்த பாடகர்கள் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் இலங்கை - யாழ்ப்பாணத்தை சார்ந்த பிரபல பாடகியான உதயசீலன் கில்மிசா கலந்து கொண்டுள்ளார்.இவர் முதலாவது சுற்றிலேயே குயில்பாட்டு என்னும் பாடலைப் பாடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.


இவருடைய குரலால் ஈர்க்கப்பட்ட பலர் கில்மிஷாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் இந்த வாரம் சரிகமபவில் Devotional Round நடைபெறுகின்றது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பக்கித் பாடல்களைப் பாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கில்மிஷா அன்பென்னும் மழையிலே என்னும் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலைக் கேட்ட ரசிகர்கள் இவரது குரலில் ஏதோ மேஜிக் இருக்கு என்று தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement